பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Published : Jul 03, 2024, 10:53 PM ISTUpdated : Jul 03, 2024, 11:32 PM IST
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சுருக்கம்

பாஜகவின் மூத்த தலைவர் மதுரா சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பாஜக பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் மதுரா சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்வானி டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

96 வயதான எல்.கே.அத்வானி இதற்கு முன் ஜூன் 26ஆம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அக்னிவீர் அஜய் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லையா? விமர்சனங்களுக்கு பதில் அளித்த இந்திய ராணுவம்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய அரசு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அவரது இல்லத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு விருதை வழங்கினார். அத்வானியின் உடல்நலக் குறைவு காரணமாக இந்த நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. பிரதமர், துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் அப்போது உடன் இருந்தனர்.

எல்.கே. அத்வானி நவம்பர் 8, 1927 இல் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தார். 1980ஆம் ஆண்டு தொடங்கி பாஜகவுக்கு நீண்டகாலம் தலைவராகப் பணியாற்றினார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். 1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில்1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

Varalakshmi Reception: வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு! பிரம்மாண்ட மேடையில் குவிந்த பிரபலங்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!