போலே பாபாவைப் போல வாய்ஜாலம் காட்டும் சாமியார்களை கடவுள் போல எண்ணி மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதே இதுபோன்ற பெரும் துயரச் சம்பவம் நடப்பதற்குக் காரணம் என்பதே நிதர்சனம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆன்மிக சொற்பொழிவில் தள்ளுமுள்ளுவில் போலே பாபா என்ற சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காகக் குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். யார் இந்த போலே பாபா, அவரது சொற்பொழிவை கேட்க பெண்கள் படையெடுத்துச் செல்லும் நிலை எப்படி உருவானது என்பதைக் குறித்துப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் அருகே உள்ள பகதூர் நகரைச் சேர்ந்தவர் சூரஜ் பால் சிங். உத்தரப்பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். 1990களில் ஆக்ராவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது திடீரென பணியை விட்டார். பிறகு, வேலை இல்லாமல் சுற்றிதிரிந்த சூரஜ் பால் சிங், திடீரென தனது பெயரை நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்று மாற்றுக்கொண்டதாகவும் அவரது மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சூரஜ் பால் தனக்குக் கிடைத்த புகழாலும் வருமானத்தாலும் மெல்ல மெல்ல போலே பாபாவாக உருமாறினார். கிராமத்தில் உள்ள தனது 18 ஏக்கர்நிலத்தில் பெரிய ஆசிரமம் ஒன்றை கட்டினார். தனது ஆன்மிக உரை மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்க தொடங்கிய அவரது புகழ் மாநிலத்தைக் கடந்து பரவியது. போலே பாபாவின் ஆசிரமத்துக்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கான வர தொடங்கினர்.
27 வயசுதான்... 65 கோடி வீடு... 1,000 கோடி சொத்து... மகா ராணி போல வாழும் பாலிவுட் அழகி யார் தெரியுமா?
இந்நிலையில், ஹத்ராஸில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாபா ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் மாவட்டத்தில் இடா நகர் அருகில் உள்ள ரதிபன்பூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என கூறி போலீசில் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் திரண்டதோ, சுமார் 3 லட்சம் பேர்.
போலே பாபா உரையாற்றி விட்டு சென்றபோது அவரது வாகனம் சென்ற பாதையில் அவரது காலடியைத் தொடவும் காலடி மண்ணை எடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்துச் சென்றனர். அரங்கைவிட்டு வெளியேற முயன்றவர்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.
இதனால், நிலைதடுமாறிய பலர் அருகில் இருந்த சேறும் சகதியுமான வாய்க்காலில் ஒருவர் மீது ஒருவராக விழத் தொடங்கினர். சேறாக இருந்தால் உடனே மீண்டு எழ முடியாமல், நெரிசலில் சிக்கி மிதிபட்டு தவித்தனர். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த போலே பாபாவின் கரசேவகர்கள் நெரிசலில் சிக்கியவர்களை மீட்க போலீசாருக்கு உதவவில்லை என்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லை செய்யப்படவில்லை என்பதும் பலியானவர்களின் குடும்பத்தினர் குமுறுகிறார்கள். ஹத்ராஸில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
போலே பாபாவைப் போல வாய்ஜாலம் காட்டும் சாமியார்களை கடவுள் போல எண்ணி மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதே இதுபோன்ற பெரும் துயரச் சம்பவம் நடப்பதற்குக் காரணம் என்பதே நிதர்சனம்.
தமன்னாவின் ஆபீஸ் வாடகைக்கே இவ்ளோ செலவு ஆகுது! அப்ப சொத்து மதிப்பு எவ்வளவுன்னு பாருங்க...