
அயோத்தி விவகாரத்தில் ராகுல் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
ராமர் கோயில் வழக்கு
அயோத்தியில் ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் சார்பில் காங். கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வருகிறார்.
அமித்ஷா
விசாரணையின்போது இந்த வழக்கின் விசாரணையை 2019-ம் ஆண்டு ஜூலைக்கு பின் தொடங்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது-
ராகுல் நிலை
குஜராத் தேர்தலை மனதில் வைத்தே, பிரசாரம் என்ற பெயரில் காங்.துணை தலைவர் ராகுல் குஜராத்தில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று வருகிறார்.
அயோத்தி விவகாரத்தில் அவர் தனது கருத்தை கூறவில்லை. இதில் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல்
ஆனால் காங். கட்சியை சேர்ந்த கபில் சிபல் அயோத்தி வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு கூறி இழுத்தடித்து வருகிறார்.
கபில்சிபலின் கருத்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து தான் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.