யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியல் - தாஜ் மஹாலுக்கு 2-வது இடம் 

Asianet News Tamil  
Published : Dec 06, 2017, 10:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியல் - தாஜ் மஹாலுக்கு 2-வது இடம் 

சுருக்கம்

Taj Mahal is ranked 2nd in UNESCO World Heritage List.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ் மஹாலுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

உலக அதியம்

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளது.

முதலிடத்தில் அங்கோர்வாட்

இந்நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆன் லைனில் உலக அளவில் யுனஸ்கோ கலாசாரம் மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் இடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் பிடித்தது.

தாஜ்மஹால்

இரண்டாவது இடத்தை இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் பிடித்துள்ளது. மேலும் சீன பெருஞ்சுவர், பிரேசில் நாட்டில் உள்ள இஹாஷூ தேசிய பூங்கா, உள்ளிட்ட இடங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்திய அரசின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஹ்மஹாலை பார்வையிட்டு செல்வதாகவும், அதே நேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும் போது தாஹ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

80 லட்சம் பேர்

தாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1983 -ம் ஆண்டு தாஜ் மஹால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்து இருந்தது.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!