பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து சிடி ரவி நீக்கம்; அனில் ஆண்டனிக்கு முக்கியத்துவம்!!

By Asianet Tamil  |  First Published Jul 29, 2023, 10:41 AM IST

பாஜக கட்சி புதிய தேசிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது. 


காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, தெலுங்கானா பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர் பாஜக தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஏஎம்யு துணைத் தலைவர் தாரிக் மன்சூர் பாஜகவின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திலீப் கோஷ், ராதா மோகன் அகர்வால், சி.டி. ரவி, திலீப் சேத்தியா, ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர், வினோத் சோங்கர் போன்ற பாஜகவின் தேசியப் பொறுப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட இந்தப் பட்டியலில் 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவை ஜேபி நட்டா மாற்றி அமைத்துள்ளார்.

இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி. கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் பாஜக கட்சியில் அனில் ஆண்டனி தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கு முந்தைய ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். குஜராத்தில் 2002ஆம் நடந்த கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்தப் ஆவணப்படம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனில் ஆண்டனி கருத்து வெளியிட்டு இருந்தார். இதைக் கண்டித்து இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜக கட்சியில் அனில் ஆண்டனி சேர்ந்தார்.

செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி: பிரதமர் மோடி!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மன்சூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து சட்டப்பேரவை கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. 

click me!