
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் முஸ்லிம் காதலனிடம் இருந்து இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். அதனை முன்னிட்டு அந்தப் பெண்ணை அவர், சமீபத்தில் வெளியான 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை பார்க்கவும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்து பெண்ணின் கதையைக் கூறும் திரைப்படம் கேரளா ஸ்டோரி. இதில் அதா ஷர்மா முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இந்துப் பெண்ணான அவர் இஸ்லாத்தை தழுவ மூளைச்சலவை செய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்படுவதையும், அங்கு அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர நிர்பந்திக்கப்படுவதையும் அந்தப் படம் சித்தரிக்கிறது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது முதலே பெரும் சர்ச்சையில் சிக்கியது.
சிக்னலில் வேண்டுமென்றே நிகழ்ந்த தலையீட்டால் ரயில் விபத்து நடந்துள்ளது: ரயில்வே அதிகாரிகள் தகவல்
இந்நிலையில், பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படத்திற்குச் சென்ற அந்தப் பெண் தனது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தனது காதலரான யூசுப்புடன் மாயமாகிவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அந்தப் பெண்ணின் குடும்பம் போபாலின் நயா பசேரா பகுதியில் வசித்து வருகிறது.
19 வயதான அந்தப் பெண் ஒரு நர்சிங் மாணவி. அவர் காதலித்த முஸ்லிம் இளைஞர் யூசுப் அவரது பக்கத்து வீட்டில் வசித்திருக்கிறார். மே 30ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் தன் காதலரான யூசுப்புடன் ஓடிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றுவிட்டதாக அவர்கள சொல்கின்றனர்.
சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!
இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் போபாலின் கமலா நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. யூசுப் தங்கள் மகளிடம் ஆசை வார்த்த கூறி மயக்கி அவளுடன் ஓடிவிட்டதாக பெண்ணின் பெற்றோர் தங்கள் புகாரில் கூறியுள்ளனர். யூசுப், தங்கள் மகள் பெயரில் வங்கிக்கடன் பெற்று, இஎம்ஐ செலுத்தும்படி வற்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யூசுப் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளதாக போலீசார் சொல்கின்றனர். ஆனால், அந்தப் பெண் போலீசாரிடம் தன் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர், தன் சொந்த விருப்பத்தின் பேரில்தான் யூசுப்புடன் தான் சென்றதாகக் கூறியுள்ளார்.
மேக் புக் வாங்கணுமா! வந்தாச்சு 15 இன்ச் மேக் புக் ஏர்! ஆப்பிள் கொடுத்த அட்டகாசமான அப்டேட்!