குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

Published : Jun 06, 2023, 11:46 AM IST
குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

சுருக்கம்

சுரினாம் நாட்டின் உயரிய விருது பெற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு, பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக சுரினாம் நாட்டிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிற்கு சுரினாம் நாட்டு தலைநகர் பரமரிபோவில் ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத்தை சந்தித்த திரெளபதி முர்மு, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து ஆலோசித்தார்.

பின்னர், குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிற்கு, சுரினாம் நாட்டின் மிக உயரிய விருதான "Grand Order of the Chain of the Yellow Star"-ஐ அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத் வழங்கி கெளரவித்தார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு, பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், சுரினாம் அரசு மற்றும் மக்களிடமிருந்து பெற்ற இந்த உயரிய விருது, நமது இரு நாடுகளுக்கிடையேயான நீடித்த நட்புறவைக் குறிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!