சிக்னலில் வேண்டுமென்றே நிகழ்ந்த தலையீட்டால் ரயில் விபத்து நடந்துள்ளது: ரயில்வே அதிகாரிகள் தகவல்

By SG BalanFirst Published Jun 6, 2023, 9:21 AM IST
Highlights

மின்னணு இன்டர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே செய்யப்பட்ட குறுக்கீட்டு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரிலே ரூம் திறந்து கிடந்ததா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கிய நிலையில், மின்னணு இன்டர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே செய்யப்பட்ட குறுக்கீட்டு செய்ததால் தான் விபத்து நடந்ததாக ரயில்வே உயர் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

சிபிஐ குழு விசாரணையைத் தொடங்க திங்கட்கிழமை மாலை ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றது. மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து ரயில்வேயின் அலட்சியத்தால் நடந்ததா அல்லது ஏதேனும் நாசவேலையா என்று விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வேயின் முதல்கட்ட ஆய்வில், பஹனகா பஜார் நிலையத்தில் சிக்னல்களைக் கையாளும் வகையில் உள்ள இன்டர்லாக் சிஸ்டத்தின் வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இப்படிச் செய்யப்பட்டதற்கான நோக்கத்தைக் கண்டறிய சிபிஐ விசாரிக்கும் எனத் தெரிகிறது.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

திங்களன்று ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலின்படி, முதற்கட்ட விசாரணையில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் முறைகேடு நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சிபிஐ போன்ற ஏஜென்சியின் விசாரணையில் விபத்துக்கு யார் யார் பொறுப்பு, அவர்களின் நோக்கம் என்ன எனக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறிய கருத்தையே ரயில் பவன் உயர் அதிகாரி ஒருவரும் வலியுறுத்தினார். சிக்னல் வழங்குவற்கான இன்டர்லாக் சிஸ்டம் மிகவும் பாதுகாப்பானது. இந்த சிஸ்டம் செயலிழந்தால், அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறமாகி, அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுவிடும் என்பதால் இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.

“எனவே, வேண்டுமென்றே செய்யப்பட்ட குறுக்கீடு இல்லாவிட்டால், ஒரு ரயிலை பிரதான பாதையில் இருந்து லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியமில்லை. இந்தக் கோணத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்று அந்த அதிகாரி கூறினார். ரயில்வே பயன்படுத்தும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் சீல் 4 சான்றிதழைப் பெற்றுள்ளது. இது 100% சிறப்பான பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

மகன் இறந்த செய்தியை நம்பாமல் ஓடிவந்த தந்தை... பிணவறையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்

இந்த விவகாரத்தில் ரயில்வே வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன் என்பதற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் பதில் சொல்கிறார். “அது மிக முக்கியமானது. எங்கள் ஆய்வின்போது நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் விசாரணை நடந்த ஒரு தொழில்முறை ஆய்வு தேவை. அதனால்தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

ரயில்வே சிக்னலிங் அமைப்பு வைக்கப்பட்டுள்ள ரிலே ரூம் திறந்து கிடந்ததா என்ற கேள்விக்கு அந்த அதிகாரி பதிலளிக்கவில்லை. ஒரு ரயிலுக்கான பாதை நிர்ணயிக்கப்பட்டு, அதன் பயணம் தொடங்கிவிட்டால் முடியும் வரை அதை மாற்ற முடியாது என்று பல ரயில்வே நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சூப்பர்.! இந்தியாவில் உருவாகும் போர் விமான இயந்திரங்கள் - பிரதமர் மோடியின் அசத்தல் திட்டம்

click me!