மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று சந்தித்துப் பேசினார்.
சமீபகாலமாக பாஜகவையும், பிரதமர் மோடியையும், அவரின் நிர்வாகத்தையும் விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய பிரியங்கா காந்தி
தேசிய அரசியலிலும், மாநிலத்திலும் பாஜகவை கடுமையாக விமர்சித்துவரும் மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்ததுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து ஏறக்குறைய 30 நிமிடங்கள் வரை சுப்பிரமணியன் சுவாமி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தாக சுப்பிரமணியன் சுவாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Today I was in Kolkata and met the charismatic Mamata Banerjee. She is a courageous person. I admired her fight against the CPM in which she decimated the Communist pic.twitter.com/Gejytxpl4o
— Subramanian Swamy (@Swamy39)பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இன்று கொல்கத்தாவில் சென்று, அனைவரையும் ஆளுமையால் வசீகரிக்கும் மம்தா பானர்ஜியைச் சந்தித்தேன். மம்தா உண்மையில் துணிச்சலான பெண்மணி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் என்னை ஈர்த்தது, கம்யூனிஸ்ட்களை அழித்துவிட்டார்” எனப் புகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மம்தா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
சமீபகாலமாக சுப்பிரமணியன் சுவாமி மம்தா பானர்ஜியை புகழ்ந்து அவ்வப்போது ட்விட் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் பதிவிட்ட ட்விட்டில் “ மம்தா பானர்ஜி புத்திசாலித்தனமான தலைவர் என்பது எப்போதுமே எனக்குத் தெரியும். இருவருக்கும் இடையே சித்தாந்தரீதியாக வேறுபாடு இருந்தாலும், அவரின் புத்திசாலித்தனத்தை அங்கீகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ரூ.250 கோடியில் மகளுக்கு ‘பாகுபலி’ திருமணம் செய்த டிஆர்எஸ் முன்னாள் எம்.பி: வியக்க வைத்த வசதிகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதேபோன்று மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். அப்போது, அவர் பதிவிட்ட ட்விட்டில் “ நான் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பணியாற்றியுள்ளேன் அல்லது சந்தித்திருக்கிறேன். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் ஆகியோருடன் மம்தா பானர்ஜியை ஒப்பிடலாம். இவர்கள் அனைவரும் அரசியலில் அரிதான குணத்தைக் கொண்டவர்கள்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.