மாநிலங்களவையில், நியமன எம்.பி.,க்கள் 4 பேர் ஓய்வு பெற்றதால், பாஜக-வின் பலம் 86 ஆகவும், பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 101எம்பிக்களை மட்டுமே கொண்டுள்ளது. இது, மொத்தமுள்ள 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போதைய பெரும்பான்மையான 113 இடங்களுக்கும் கீழே சென்றுள்ளது.
மாநிலங்களவையின் நியமன எம்.பிக்கள் ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் நான்கு இடங்கள் சரிந்தது. இந்த
நால்வரும் அணிசேரா உறுப்பினர்களாக, ஆளும் கட்சியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
நியமன எம்பிக்கள் 4 பேர் ஒய்வுபெற்றதையடுத்து, பாஜகவின் பலத்தை 86-ஆகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை 101 ஆகவும் குறைக்கிறது, மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட நிலையில், தற்போதைய பெரும்பான்மையான 113க்குக் இடங்களுக்கும் கீழே உள்ளது.
மாநிலங்களவையின் தற்போதைய பலம் 225
காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணிக்கு மொத்தம் 87 இடங்கள், காங்கிரஸ்க்கு 26 எம்பிக்கள், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்பிக்கள், டெல்லியின் ஆம் ஆத்மி மற்றும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவுக்கு தலா 10எம்பிக்கள் உள்ளன.
பாஜக அல்லது காங்கிரஸ் உடன் இணையாத கட்சிளான தெலங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகரராவின் பிஆர் எஸ் கட்சி, மற்றும் பிற நியமன எம்பிக்கள் மற்றும் சில சுயேட்சை எம்பிக்களும் அடங்குவர்.
MK STALIN : கர்நாடக அரசிற்கு செக் வைக்க திட்டம் போட்ட ஸ்டாலின்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு திடீர் அழைப்பு
பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை குறந்தால் என்ன ஆகும்?
மாநிலங்கள் அவையில் மசோதாக்களை நிறைவேற்ற, தமிழ்நாட்டின் முன்னாள் கூட்டாளியான அதிமுக மற்றும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி போன்ற NDA அல்லாத கட்சிகளை பாஜக அரசு நம்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களின் 15 வாக்குகளை பாஜக நம்பலாம் என்று கருதினால், மசோதாக்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் மேலும் 13 கூடுதல் வாக்குகள் பாஜகவுக்கு தேவைப்படும்.
YSRCP (11) மற்றும் AIADMK (4) ஆகியவை பாஜக-வின் கூட்டணிக்கள் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கடந்த காலங்களில் பாஜகவுக்கு தேவை அடிப்படையிலான ஆதரவை வழங்கியது. எனவே பிரதமர் மோடியின் பாஜகவுக்கு குறைந்தது 11 வாக்குகள் நிச்சயம் இருந்தது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் BJD யும் இதேபோன்ற ஆதரவை வழங்கியது, ஆனால் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வால் பிஜேடி தோற்கடிக்கப்பட்டதால், இனி அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
BJDக்கு உள்ள 9 ராஜ்யசபா எம்பிக்கள்!
ADMK ஆதரவு அளிக்க விரும்பாமல், நவீன் பட்நாயக்கின் BJD விலகியிருந்தால், பாஜக நியமன உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும்.
மாநிலங்களவையில் மொத்தம் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அணிசேரா உறுப்பினர்களாகவே இருந்தாலும், ஆளும் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், நடைமுறையில் அவர்கள் ஆளும் கட்சியை ஆதரிக்க முனைகிறார்கள்.
undefined
அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ
மாநிலங்களவையில் உள்ள காலி இடங்கள்!
மாநிலங்களைவையில் தற்போது மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நடத்தப்பட்ட 11 இடங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதில், மகாராஷ்டிரா, அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இடங்களும், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் காலியாக உள்ளன.
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அசாம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகள் உள்ளது. மஹாராஷ்டிராவில் தனது கூட்டணி முடிவை தொடர்ந்தால் அங்கிருந்து மேலும் இரண்டு எம்பிக்களை வெற்றி பெறலாம்.
இதன் மூலம் பாஜக-வுக்கு ஒன்பது இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம். அதுவும், நியமன உறுப்பினர்களின் வாக்குகள் மற்றும் YSRCP-இன் வாக்குகளுடன் வெற்றி பெற்றால், அது பெரும்பான்மையை கடக்க போதுமானதை விட அதிகமாக இருக்கும்.