இடதுசாரி, பாஜக தொடர்ந்து மோதல் - கேரளாவில் இன்று முழு கடையடைப்பு

 
Published : Oct 13, 2016, 11:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
இடதுசாரி, பாஜக தொடர்ந்து மோதல் - கேரளாவில் இன்று முழு கடையடைப்பு

சுருக்கம்

கேரள மாநிலத்தில் பாஜக, இடதுசாரிகள் இடையே அடிக்கடி மோதல் சம்பவம், ஏற்பட்டு தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. இதனை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இருதரப்பிலும், மாறி மாறி தொண்டர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர்.

கண்ணூர் மாவட்டம் பினராயியில் பா.ஜ.க. தொண்டர் ரமித் (25) நேற்று குத்திக்கொலை செய்யப்பட்டார். இடதுசாரி கட்சியின் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்ட அடுத்த 2 நாளில் ரமித் கொல்லப்பட்டுள்ளார். இது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊர் ஆகும். கேரளாவில் தொடரும் அரசியல் கொலைக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கேரளாவில் பா.ஜ.க. வளர்ச்சி அடைவதையும், பா.ஜ.க. தேசிய கமிட்டி கூட்டம் மாபெரும் வெற்றி பெற்றதையும் இடதுசாரி கூட்டணியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை குறிவைத்து இடதுசாரி கட்சியின் அரசியல் குண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரமித்தின் தந்தை 2002ம் ஆண்டு இடதுசாரி கட்சியினரால் கொல்லப்பட்டுள்ளார். எனவே தொடரும் இந்த அரசியல் கொலைகள் குறித்து 
சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

இதற்கிடையில், பா.ஜ.க. தொண்டர் கொலையை கண்டித்து மாநில அளவில் இன்று முழு அடைப்பு நடத்த உள்ளதாக கேரள பா.ஜ.க. அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்