ராஜஸ்தானில் பரபரப்பு - ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கும் பணி தீவிரம்

 
Published : Oct 13, 2016, 11:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ராஜஸ்தானில் பரபரப்பு - ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கும் பணி தீவிரம்

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். அவளை உயிருடன் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பாரேர் கிராமத்தில் கோமள் (5) என்ற சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் வெளியே நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தாள். அருகில், 100 அடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. விளையாடி கொண்டிருந்த சிறுமி கோமள், திடீரென அந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாள்.

உடனே சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமியை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்