பெரும்பான்மையை நிரூபித்தார் பிரேன்சிங்... மணிப்பூரில் பா.ஜ.க.ஆட்சி உறுதியானது

 
Published : Mar 20, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பெரும்பான்மையை நிரூபித்தார் பிரேன்சிங்... மணிப்பூரில் பா.ஜ.க.ஆட்சி உறுதியானது

சுருக்கம்

pren singh proved his majority in manipur

மணிப்பூர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரேன்சிங் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார்.

நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 28  இடங்களையும், பா.ஜ.க. 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மையை இல்லாததால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்தது. இந்தச் சூழலில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன. 

இதனைத் தொடர்ந்து பிரேன்சிங் பா.ஜ.க.வின் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் அமைச்சராக பதவியேற்றார். இந்தச்சூழலில்  ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அறிவுறுத்தலின்படி சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது 32 உறுப்பினர்கள் பிரேன்சிங்குக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகராக கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். 

PREV
click me!

Recommended Stories

10 மீ. கூட வியூ இல்லை.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்
பொது நிகழ்ச்சியில் மருத்துவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர்.. எதிர்கட்சிகள் கொந்தளிப்பு