Electricity amendment bill 2022: மின்சார சட்டத்திருத்த மசோதா அறிமுகம்: மக்களவையில் காரசார வாக்குவாதம்

By Pothy Raj  |  First Published Aug 8, 2022, 4:28 PM IST

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று அறிமுகம் செய்தது. 


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று அறிமுகம் செய்தது. 

மாநில அரசின் பல உரிமைகளை இந்தச்சட்டத்திருத்தம் பறித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Tap to resize

Latest Videos

இந்த மசோதாவு மீது விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்,ஆலோசிக்க வேண்டும் என்பதால் நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

சூடுபிடிக்கும் பிஹார் அரசியல்!பாஜக-வை கைகழுவுங்க:நிதிஷ் குமார்-க்கு லாலு கட்சி அழைப்பு

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மின்சார சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தபோது, ஆர்எஸ்பி எம்.பி. என்.கே.பிரேமந்திரன், காங்கிரஸ் எம்.பி.க்கள் மணிஷ் திவாரி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. எம்.ஏ.ஆர்பி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், திமுக எம்.பி. டிஆர் பாலு ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது என்று வலியுறுத்தினர்.

ஆர்எஸ்பி எம்.பி. பிரேமசந்திரன் பேசுகையில் “ மின்சாரம் என்பது மத்தியப்பட்டியலிலும், மாநிலப் பட்டியிலிலும் இருக்கும்போது, இந்த மசோதாவை அறிமுகம் செய்யும் முன் மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டியது தலையாய கடமை” எனத் தெரிவித்தார்

மின்சார சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே அறிமுகம்

காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசுகையில் “ பல தனியார் நிறுவனங்களை மின்பகிர்மானத்துக்கு ஒரேபகுதியில் அனுமதிக்கும்போது, தனியார் நிறுவனங்கள்தான் லாபம் அடைவார்கள், அரசுக்கு கடும் இழப்பு ஏற்படும். மின்பகிர்மானத்தில் மத்திய அரசின் பங்களிப்பை இந்த மசோதா குறைக்கிறது” எனத் தெரிவித்தனர்

ராய், ஆரிப் இருவரும் பேசுகையில் “ விவசாயிகள் அமைப்பிடம் மின்சார சட்டத்திருத்த மசோதாவை செயல்படுத்தமாட்டோம் என்று மோடி அரசு வாக்குறுதியளித்திருக்கிறது. அந்த வாக்குறுதிக்கு மாறாக நடக்கிறது அரசு” எனத் தெரிவித்தனர்.

திமுக எம்.பி. டிஆர் பாலு பேசுகையில் “ தமிழக அ ரசு பல ஆண்டுகளா விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த சட்டத்திருத்தம், ஏழை விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும்”எ னத் தெரிவித்தார்

மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்?

இதற்கு பதில் அளித்த மத்திய மின்துறை அமைச்சர் “ இது தவறான பிரச்சாரம். இந்த மசோதாவுக்கு எதிராக யாரோ தவறான தகவலைக் கூறியுள்ளார்கள்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். மானியம் திரும்பப் பெறப்படாது. மாநிலங்களுடன் ஆலோசித்துதான் கொண்டுவந்தோம். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவான மசோதா” எனத் தெரிவி்த்தார்

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்  பின்னர் வெளிநடப்பு செய்தனர்
 

click me!