பாகிஸ்தானில் இருந்து 'ஜெய்ஷ்' பயங்கரவாதிகள் ஊடுருவல்.. உளவுத்துறை எச்சரிக்கை.. பீகாரில் உச்சகட்ட பரபரப்பு!

Published : Aug 28, 2025, 06:10 PM IST
Terrorists

சுருக்கம்

பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்யலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பீகார் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

பீகாரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் யார்?

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் ஹுசைன், முகமது உஸ்மான் ஆகியோர் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து பீகார் மாநிலத்திற்குள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் ராவல்பிண்டி, உமர்கோட் மற்றும் பஹவல்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட் விவரங்கள் எல்லை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிகார் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சதி?

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் தாக்குதல் நடத்தி தப்பிக்க முடியாது என்று பீகார் மண்ணிலிருந்து சபதம் எடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்திய ஆயுதப் படைகள் மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கின. இதில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது

சமீபத்தில், பீகாரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "'ஆபரேஷன் சிந்தூர்' நான் இந்த பீகார் மண்ணில் எடுத்த சபதம். எந்தப் பயங்கரவாதியும் இந்திய மண்ணில் தாக்குதல் நடத்தி தப்பிக்க முடியாது. பாதாள உலகம் வரை தேடி அவர்களை எங்கள் ஏவுகணைகள் வேட்டையாடும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு இந்த பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!