பீகார் 120 இல் 80 காங்கிரஸ்- ஆர்ஜேடி ஜெயிக்கும்..! அடித்து சொல்லும் ராஜீவ் சுக்லா

Published : Nov 07, 2025, 09:13 AM IST
Rajeev Shukla

சுருக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மகாகத் பந்தன் கூட்டணி 80 இடங்களை வெல்லும் என காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது என்றே கூறலாம். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மகாகத் பந்தன் கூட்டணியின் முக்கிய முகமான ராஜீவ் சுக்லா, தேர்தல் நிலைமை குறித்து பேசியுள்ளார். கயா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மகாகத் பந்தன் கூட்டணியின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி, முதல் கட்ட வாக்குப்பதிவின்படி மொத்தம் 121 இடங்களில் 80 இடங்களை மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “பீகார் மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளன. சமூக நீதி, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் ஆகியன துறைகளில் மகாகட்பண அரசு சிறந்த பணி செய்து வருகிறது. இதுவே மக்களின் ஆதரவை பெரிதும் பெற்றிருக்கிறது,” என்றார்.

மற்ற கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், தற்போது உண்மையான மக்கள் ஆதரவு பெற்ற கூட்டணியாக நாங்கள் உருவெடுத்துள்ளதாகவும் ராஜீவ் சுக்லா வலியுறுத்தினார். “நாங்கள் இந்தத் தேர்தலில் எளிதாக பெரும்பான்மையுடன் அரசு அமைப்போம். மக்களின் நம்பிக்கை எங்களுடன் உள்ளது,” என அவர் உறுதியுடன் கூறினார்.

பீகாரில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, மற்றும் பிற கூட்டணி கட்சிகள் இணைந்து மகாகத் பந்தன் கூட்டணியாக போட்டியிடுகின்றன. எதிரணியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) பல்வேறு வலுவான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ராஜீவ் சுக்லாவின் இந்த அறிக்கை, மகாகத் பந்தன் ஆதரவாளர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பீகாரில் மக்களின் தீர்ப்புக்காக எல்லா கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன. ராஜீவ் சுக்லாவின் கணிப்பு உண்மையாகுமா என்பது சில நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!