ஈ-காமர்ஸ் ஊழியர்களுக்கு ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ்! கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு!

By SG Balan  |  First Published Jul 8, 2023, 3:44 PM IST

டெலிவரி பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடாக ரூ.2 லட்சமும், விபத்துக் காப்பீடாக மேலும் ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு அறிவிக்கப்படுள்ளது.


கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக பெங்களூரு சென்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ஈ-காமர்ஸ் டெலிவரி ஊழியர்களைச் சந்தித்து உரையாடினார். அவர்களுடன் காபியும் தோசையும் சாப்பிட்டுக்கொண்டே அவர்களது வேலையில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அந்தச் சந்திப்பின் எதிரொலியாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட்டில், ஈ-காமர்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் அமைப்புசாரா ஊழியர்களுக்கு காங்கிரஸ் அரசு சிறப்பு சமூக பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என முதல்வர் சித்தராமையா கூறினார்.

Tap to resize

Latest Videos

இந்திய ஏவுகணைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட டிஓர்டிஓ அதிகாரி!

இ-காமர்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர / பகுதிநேர டெலிவரி பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடாக ரூ.2 லட்சமும், விபத்துக் காப்பீடாக மேலும் ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு அறிவிக்கப்படுள்ளது. இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை மாநில அரசு ஏற்கும் என்று உறுதியளித்துள்ளது.

இதன் மூலம் ஸ்விக்கி, ஜோமேட்டோ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற தனியார் ஆல்லைன் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பயன் அடைய உள்ளனர். இத்திட்டத்தை அறிவித்தபோது, முந்தைய பாஜக அரசை விமர்சித்த சித்தராமையா, கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பாஜக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தினால் தொழிலாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது என்று சாடினார்.

தமிழக பள்ளிகளில் ஹைடெக் கல்வி! மைக்ரோசாப்ட் TEALS ஒப்பந்தம்! அமைச்சர் மகேஷை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

"காங்கிரஸ் அரசு உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியையும் மதிக்கிறது. தொழிலாளர்களுடன் அரசுக்கு நட்பை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்"ம் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தின் 14வது பட்ஜெட்டை அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 3,27,747 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை பற்றி முக்கிய அறிவிப்பு! சித்தராமையா கொடுத்த வாக்குறுதி!

click me!