2வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.. பெண் யார் தெரியுமா ?

By Raghupati R  |  First Published Jul 6, 2022, 2:28 PM IST

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரண்டாவது முறையாக சண்டிகரில் திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தற்போது பஞ்சாப் முதல்வராக பதவி வகிக்கும் பகவந்த் மான் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்ப்ரீத் கவுரை நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

Latest Videos

சண்டிகரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது முதல் மனைவியை 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார். அவர்  இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரின் இரண்டு குழந்தைகளும் இவரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவந்த் மானின் தாயார் டாக்டர் குர்ப்ரீத் கவுரை தன்னுடைய மருமகளாக தேர்ந்தெடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பகவந்த் மானின் சகோதரியும் தன்னுடைய சகோதரனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணி திருமண ஏற்பாடுகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 48 வயதாகும் பகவந்த் மானின் திருமணத்திற்கு ஆம் ஆத்மி தலைவர் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வர உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

click me!