உஷார்… ஆதார் எண்ணை கேட்டு போன் செய்தால் சொல்லிடாதீங்க… பணம் மொத்தமும் “அபேஸ்” ஆகிடும்…

 
Published : Jun 22, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
உஷார்… ஆதார் எண்ணை கேட்டு போன் செய்தால் சொல்லிடாதீங்க… பணம் மொத்தமும் “அபேஸ்” ஆகிடும்…

சுருக்கம்

beware of aadhaar fraudsters

வங்கி டெபிட்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி ஒரு கும்பல் ஆதார் எண், டெபிட்கார்டு, ஓ.டி.பி. எண் ஆகியவற்றை மக்களிடம் கேட்டு பெற்று பணம் மொத்தத்தையும் “அபேஸ்” செய்யும் நூதன மோசடி அரங்கேறி வருகிறது.

நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்றத்தை மத்தியஅரசு அறிமுகப்படுத்தியது. மேலும், ரூ.50ஆயிரத்துக்கு அதிகமாக ரொக்கமாக வங்கியில் டெபாசிட் செய்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற நோக்கில் டிசம்பர் மாதத்துக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத கணக்குகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் மக்களிடம் இருந்து நூதன மோசடி மூலம் பணத்தை திருடத் தொடங்கிவிட்டனர். அதாவது, ஆதார் எண்ணை, டெபிடகார்டு, வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் எனக்கூறும் அந்த நபர்கள் வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேசி, அனைத்து விவரங்களையும் கறந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

தங்களை வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது வங்கியில் இருந்து பேசுகிறோம் என முதலில் அறிமுகம் செய்வார்கள். அதன்பின், சேவையை வேகப்படுத்தும் விதமாக டெபிட்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி, அந்தகுறிப்பிட்ட வாடிக்கையாளர் கணக்கு வைத்து இருக்கும் வங்கியைக் கூறி, டெபிட்கார்டு, ஆதார் எண்ணை கூறுங்கள் என்று கேட்பார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வங்கிக்குக்கும் டெபிட் கார்டில் இருக்கும் பொதுவான 12 இலக்கத்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். அதன்பின் உங்களின் டெபிட்கார்டு கடைசி 4 எண்களையும், சி.வி.வி. எண்ணும் கொடுங்கள் எனக் கேட்பார்கள். அதன்பின், அந்த கும்பல் ஆன்-லைனில் அந்த விவரங்களை வைத்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு ஓ.டி.பி. பாஸ்வேர்டு அவர்கள் செல்போனுக்கு வந்தவுடன், மீண்டும் தொலைபேசி அழைப்பு செய்து, உங்களுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்டு வந்திருந்தால், அதைக் கூறவும், அந்த எண் இருந்தால்தான் டெபிட்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் எனக்கூறி, அதைப் பெறுகிறார்கள். இதை நம்பி, ஓ.டி.பி. எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் ஒரேநேரத்தில் “அபேஸ்” ஆகிவிடுகிறது.

சில வாடிக்கையாளர்கள் சுதாரித்துக்கொண்டு ஓ.டி.பி. எண்ணைதராமல் இருக்கும் போது, அவர்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் தப்பித்து விடுகிறது. இதுபோன்ற மோசடிகள் டெல்லி, மும்பை, பீகார் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை புகார்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், போலீசாரால் யாரும் கைது செய்யப்படவில்லை.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!