அகிலேஷ்குமார், மாயாவதியை விட பெஸ்ட் சாய்ஸ் யோகி ஆதித்யா நாத்... அடித்து சொல்லும் சர்வே..!

By Thiraviaraj RMFirst Published Aug 18, 2021, 5:59 PM IST
Highlights

 சில விஷயங்களில் யோகி ஆதித்யாநத்துக்கு ஆதரவு இல்லை என்கிற போதும், ஒட்டுமொத்தமாக பாஜக உத்தரப்பிரதேசத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாக அடித்துக் கூறுகிறது அந்த சர்வே முடிவுகள். 

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைத்து யோகி ஆதித்யாநாத் மீண்டும் முதல்வராவார் எனக்கூறப்படுகிறது. அந்த சர்வேப்படி தொகுதி வரியாக கருத்து கேட்கப்பட்டது.  அதன்படி ஆளும் பாஜக மக்களை நடுநிலைமையாக கையாண்டதா? என்கிற கேள்விக்கு ஹோரக்‌ஷ் பகுதி மக்கள்  ஆம்  எனக்கூறி 91 சதவித்கிதத்தினரும், பிரிஜ் பகுதியினர் 90 சதவிகிதம் பேரும், கிழக்குப் பகுதியினர் 86 சதவிகிதம் பேரும், அவாத் பகுதியை சேர்ந்தவர்கள் 95 சதவிகிதம் பேரும், காசி பகுதியினர் 88 சதவிகிதம் பேரும் கான்பூரை சேர்ந்தவர்கள் 94 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 

உங்கள் சமூக வாக்கு எனக் கேட்டதற்கு கான்பூர் மக்கள் 6 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காசியில் 8 சதவிகிதம், அவாத் பகுதியில் 5 சதவிகிதம், கிழக்கு பகுதியில் 7 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் கட்டியதாலும் யோகி ஆதித்யாநாத் செல்வாக்கு உயர்ந்திருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

ராமர் கோயில் கட்டியது இந்த தேர்தலில்  எப்படி பலனளிக்கும் என்கிற கேள்விக்கு சிறப்பாக இருக்கும் என ஹோராக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 25 சதவிகிதம் பேரும், ப்ரிஜ் பகுதியினர் 38 சதவிகிதம், கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் 8 சதவிகிதம், அவாத் பகுதியை சேர்ந்தவர்கள் 30 சதவிகிதம், காசியை சேர்ந்த 30 சதவிகிதம், கான்பூரை சேர்ந்த 50 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.  சில விஷயங்களில் யோகி ஆதித்யாநத்துக்கு ஆதரவு இல்லை என்கிற போதும், ஒட்டுமொத்தமாக பாஜக உத்தரப்பிரதேசத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாக அடித்துக் கூறுகிறது அந்த சர்வே முடிவுகள். 

click me!