பெங்களூருவில் 3 நாள் தொடர் மின்வெட்டு அறிவிப்பு! நேர அட்டவணை இதோ...

By SG Balan  |  First Published Jan 23, 2024, 6:44 PM IST

மின்வெட்டு பெரும்பாலும் காலை 10:00 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும். சில இடங்களில் சற்று மாறுபடலாம் என்று கூறப்படுகிறது.


பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) மற்றும் கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPTCL) ஆகியவை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளைத் தொடங்குவதால், அடுத்த மூன்று நாளுக்கு பெங்களூருவில் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள உள்கட்டமைப்பை புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல், மின் இணைப்புகளை பராமரித்தல், மேல்நிலை கேபிள்களை நிலத்தடியில் இடமாற்றம் செய்தல், மின்கம்பங்களை மாற்றுதல் மற்றும் நிலத்தடி கேபிள் சேதத்தை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இந்தப் பணிகளுடன், மரம் வெட்டுதல், 24x7 நீர் வழங்கல் திட்டப் பணிகள் மற்றும் பிற தொடர்புடைய பணிகளும் இந்த மின்வெட்டி நேரத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை எளிதாக்க, பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 23, செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 25 வியாழன் வரை மின்தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்வெட்டு பெரும்பாலும் காலை 10:00 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும். சில இடங்களில் சற்று மாறுபடலாம் என்று கூறப்படுகிறது.

250 கோடி ஆண்டு பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அயோத்தி ராம் லல்லா சிலை!

மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு:

ஜனவரி 23 (செவ்வாய்க்கிழமை):

மாயசந்திரா, ஜடேயா, ஷெட்டிகவுடனஹள்ளி, சிக்கேஹள்ளி, எட்டிஹள்ளி, விஜயபுரா, ஜகம்கோட்டே, தொட்டபெலவங்களா, குண்டமகெரே, சஸ்லு, EHT ஏர், மஞ்சுநாத்நகரா, சிவநகரா, பிரகாஷ் நகரா, எல்என் புரா, சுப்ரமணியநகரா, ராஜாஜிநகர் 2வது பிளாக், சுப்ரமணியநகரா, ராஜாஜிநகர் 6வது பிளாக் லேஅவுட், ஹம்பி நகர், அக்ரஹாரா, தாசரஹலி, இந்திரா நகரா, 12வது பிளாக், 7வது பிளாக், 11வது பிளாக், RGA உள்கட்டமைப்பு 1 & 2, 9வது A பிளாக், 9வது பிளாக், இன்டெல் மற்றும் ஸ்டேஷன் துணை.

ஜனவரி 24 (புதன்கிழமை):

மலேபென்னூர், ஹலிவானா, கும்பலூர், பூதிஹால், நந்திதாவரே, கொக்கனூரு, கோவினஹல், குனேபெலகெரே, ஹிந்துஸ்கட்டா, குமாரஹனஹள்ளி, குட்டடஹள்ளி, தேவரபெலகெரே, மேலகட்டே, ஜரிகட்டி, முடஹதாடி, சலகட்டி, கே.பெவினஹள்ளி, கடலெகுண்டலல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள். BWSSB STP, ஜக்கசந்திரா, HSR 5வது செக்டார், டீச்சர்ஸ் காலனி, வெங்கடபுராவின் ஒரு பகுதி, கிரீனேஜ் அபார்ட்மெண்ட், மற்றும் கோரமங்களா விரிவாக்கம்.

ஜனவரி 23 முதல் ஜனவரி 25 வரை:

தொட்டபல்லாபுரா டவுன், ராஜ்கட்டா, திப்புரு, ரகுநாதபுரா, தலக்வாரா, கந்த்ராஜபுரா, கொனகட்டா, முத்தநாயக்கனபல்யா, ஹனபே, எஸ்.எஸ்.காட்டி, அந்தரஹள்ளி, கந்தனகுண்டே, நெரலகட்டா, ஹடோனஹள்ளி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஓபலாபுரா, தொட்டசரஹல்லி, மன்நெட்சரஹள்ளி, கோடிகேடஹல்லி , மஹிமாபுரா , லக்கேனஹள்ளி, மேலகத்திகனூர், ஜி ஜி பால்யா, கே அக்ரஹாரா, அரேபொம்மனஹள்ளி, கோடகி பொம்மனஹள்ளி, லக்கசந்திரா, சுல்குண்டே, ஹல்குரு மற்றும் திம்மசந்திரா.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சீதனத்தை அயோத்தி ராமர் பாதத்தில் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி

click me!