பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கியது.
பாஜக கர்நாடகா பிரிவு தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, முந்தைய பாஜக அரசை விமர்சித்து ராகுல்காந்தி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பாஜக அரசு பொதுப்பணியில் 40% கமிஷன் பெறும் அரசு என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல் செய்ததாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததுடன், சுவரொட்டிகளையும் காங்கிரஸ் ஒட்டியது.
undefined
இதைதொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநில பாஜக தலைவர் பொய் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக காங்கிரஸ் அலுவலகம், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே சிவகுமார், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே சிவகுமார் ஆகியோர் கடந்த 1-ம் தேதி ஆஜரான நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அன்றைய தினம் ராகுல்காந்தி ஆஜராகாத நிலையில், அவர் அடுத்த விசாரணையில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இன்று ராகுல்காந்தி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு சம்மனும் அனுப்பி இருந்தனர்.
சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் சிலைகள் அகற்றம்? மக்களவை செயலகம் விளக்கம்!
அதன்படி பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.