அண்ணாமலையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதி இல்லை - தமிழக பாஜக!

By Manikanda Prabu  |  First Published Jun 6, 2024, 9:41 PM IST

அண்ணாமலையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக தெரிவித்துள்ளது


திமுகவின் வெற்றிக்கு உதவிய அதிமுகவிற்கு, பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க எந்த தகுதியும் உரிமையும் இல்லை என தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக - பா.ம.க., - தேமுதிக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து. அப்போது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என்றார்கள்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், டி.ஜெயக்குமார் சென்னை ராயபுரத்திலும் தோல்வி அடைந்தனர்.  பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம் என பேட்டி கொடுத்தனர். ராயபுரத்தில் முடிசூடா மன்னராக இருந்த நான் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வெற்றியை இழந்தேன் என டி.ஜெயக்குமார் வீர வசனம் பேசினார்.

Latest Videos

undefined

ஆனால், இப்போது பாஜக இல்லாமல் போட்டியிட்ட அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. தென் சென்னையில் டி.ஜெயக்குமாரின் மகன் டெபாசிட் இழந்துள்ளார். அங்குள்ள 6 சட்டமன்றத தொகுதிகளிலும் அதிமுகவிட பாஜகவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என சொன்ன, அதே அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்களே இப்போது, பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் தோற்றோம் என்கின்றனர். இதுதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வியூகத்திற்கு கிடைத்த வெற்றி.

சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் சிலைகள் அகற்றம்? மக்களவை செயலகம் விளக்கம்!

தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட தனிப்பெரும் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக இன்று பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. 

திமுக எதிர்ப்பால் உருவான அதிமுக இன்று திமுகவின் வெற்றிக்கு உதவும் வகையில் நடந்து கொள்கிறது. இன்றைய அதிமுக தலைவர்கள் திமுகவின் சதி வலையில் விழுந்து விட்டார்கள். அதிமுக வெல்ல வேண்டும் என்பதைவிட, அதிமுக தங்களிடம் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது திமுகவுககு சாதகமாகியுள்ளது. எனவே, திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுபவர்களுக்கு பாஜகவையோ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையோ விமர்சிக்க தகுதியும் இல்லை. எந்த உரிமையும் இல்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!