நாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்

By Selvanayagam PFirst Published Oct 22, 2019, 10:32 AM IST
Highlights

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ஸ்டிரைக்கில் வங்கி யூனியன்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.. 

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்டம்பர் இறுதியில் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி பணியாளர்கள் சங்கங்கள் முடிவு செய்து இருந்தன. 

ஆனால் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் அந்த ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோர்பர் 22ம் தேதி (இன்று) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட  அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்புகள் அண்மையில் அழைப்பு விடுத்தன.

இந்த முறை பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மற்றும் டெபாசிட் வட்டி விகித குறைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி யூனியன்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. 

இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிரைக்கில் தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் சில பிரிவு பணியாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் வங்கி சேவைகள் பெரிய அளவில் பாதிக்காது சில வங்கிகள் தெரிவித்துள்ளன.

வங்கி ஸ்டிரைக் தொடர்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, ஒழுங்குமுறை தாக்கலில், வேலை நிறுத்தத்தில் மிகவும் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். 

இதனால் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு சிறிய அளவில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளது. இன்று தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என கூறப்படுகிறது..

click me!