சசிகலா முன்கூட்டியே விடுதலையா..? கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 21, 2019, 3:25 PM IST
Highlights

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால், வழக்கிலிருந்து பெயர் நீக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து பெங்களூரு பரப்பன அஹ்ரஹார சிறையில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால், வழக்கிலிருந்து பெயர் நீக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து பெங்களூரு பரப்பன அஹ்ரஹார சிறையில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 

அடுத்த ஆண்டு இறுதியில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை ஆக வேண்டும். ஆனால், முன்கூட்டியே சசிகலா விடுவிக்கப்படுவார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. சசிகலா, இளவரசியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதேபோல், டிடிவி.தினகரனும் சசிகலா வெளியே வருவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்திருந்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பதிலளித்த கர்நாடக சிறைத்துறை டிஜிபி மெக்ரித் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விடுதலைக்கான நன்னடத்தை விதிகள் பொருந்தாது. அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பே இல்லை. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். இதனால், அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 

click me!