நாளை வங்கிகள் வேலை நிறுத்தம் ! தீபாவளி நேரத்தில் நெருக்கடி !

By Selvanayagam PFirst Published Oct 21, 2019, 10:37 AM IST
Highlights

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை வங்கி ஊழிய்ர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தீபாவளி நேரத்தில் இந்த வங்கி வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற நடவடிக்கையின் பேரில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வங்கி ஊழியர்கள் சங்கங்களிலிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் மற்றும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லும் என்று ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்த நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை  அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு பெரும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

இதன் மூலம் வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீபாவளி நேரத்தில் இந்த வங்கி வேலை நிறுத்தத்தால் பொது மக்களும், வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

click me!