
11 நாட்களாக செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் கடந்த 1௦ம் தேதி முதல் வங்கிகளில் குவிய தொடங்கினர்.
தொடர்ந்து பொதுமக்கள் கையில் இருப்பு வைத்திருந்த பணத்தை டெபாசிட் செய்வதற்காகவும், பணத்தை எடுப்பதற்காகவும் நீண்ட வரிசையில் நின்றனர். ஏ.டி.எம்.களும் செயல்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, கடந்த சனி மற்று ஞாயிற்றுகிழமைகளில் வங்கிகள் இயங்கியது. தொடர்ந்து 11 நாட்களாக செயல்பட்டு வந்த வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏ.டி.எம்.மையங்களிலும் சரிவர பணம் கிடைக்காத நிலையில், வங்கிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.