"கவனமாக இருங்க…யார்கிட்டயும் சொல்லாதீங்க…" ஒரு கோடி பேரின் வங்கி விவரம் தலா 10 காசுக்கு விற்பனை!!!

 
Published : Apr 14, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"கவனமாக இருங்க…யார்கிட்டயும் சொல்லாதீங்க…"  ஒரு கோடி பேரின் வங்கி விவரம் தலா 10 காசுக்கு விற்பனை!!!

சுருக்கம்

Bank details of over 1 crore people leaked Delhi Police busts module

ஒரு கோடி நபர்களின் வங்கி விவரம், கிரெடிட், டெபிட் கார்டுகள் எண், செல்போன் எண் உள்ளிட்டவற்றை  தலா 10 காசு முதல் 20 காசு வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியைச் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதிய பெண்ணின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1.46 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்  வங்கியில் இருந்தும், கால் சென்டர்கள், உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து சைபர் திருடர்களுக்கு இந்த விவரங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையத்து, டெல்லி தென்கிழக்கு போலீஸ் டி.சி.பி. ரோமில் பானியா தலைமையிலான சிறப்புப் படை, இந்த சைபர் குற்றவாளி ஒருவரை கைது செய்தது. அவரிடம் இருந்து டெபிட், கிரெட் கார்டு எண், பெயர், பிறந்தநாள், செல்போன் எண், உள்ளிட்ட விவரங்களை பறிமுதல் செய்தனர். இந்த விவரங்களில் பெரும்பாலானவை மூத்த குடிமக்களுடையதாகும்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் புரன் குப்தா என்றும், டெல்லி பாண்டவா நகரைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் சில பகீர் தகவல்கள் கிடைத்தன.

அதாவது வழக்கமாக 50 ஆயிரம் பேரின் வங்கிகணக்கு தொடர்பான விவரங்களை ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன் என்றும் இதை மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்ததாக விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார். அதாவது, ஒரு நபரின் வங்கிவிவரங்களை தலா 10 காசு முதல் 20 காசுகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த விவரங்களை பெறும் சைபர் கும்பல், அந்த விவரங்களை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைப்பு, வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களின் கணக்கு எண், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ரகசிய எண் ஆகியவற்றை கூறுங்கள், புதிய கார்டுகள் தரப்போகிறோம் என்று கூறுவார்கள். அவ்வாறு உண்மையான விவரங்களை கூறுபவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடுவார்கள்.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!