இந்தியாவின் அதிக வயதான சிறைக் கைதி.. 108 வயதில் சிறையில் இருந்து விடுதலை

 
Published : Apr 14, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இந்தியாவின் அதிக வயதான சிறைக் கைதி.. 108 வயதில் சிறையில் இருந்து விடுதலை

சுருக்கம்

india high aged prisoner released

இந்தியாவின் அதிக வயதுடைய சிறைக் கைதி ஒருவர் ஆளுநரின் சிறப்பு அதிகாரத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் செளதி யாதவ். 1979 ஆம் ஆண்டு கொலை வழக்கில் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 3 ஆண்டுகள் தொடர் விசாரணைக்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

முதுமையால் செளதி யாதவ் அவதிப்பட்டு வருவதை அறித்த அப்போதைய முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் யாதவை விடுதலை செய்ய ஆளுநர் ராம் நாயக்கின் ஒப்புதலோடு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தனது 108 ஆவது வயதில் செளதி யாதவ் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!