தலைவர்கள் பிறந்தநாளுக்கு பள்ளிகளுக்கு ‘லீவு' இல்லை - ஆதித்யநாத் உத்தரவால் கடுப்பான மாணவர்கள்

 
Published : Apr 14, 2017, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
தலைவர்கள் பிறந்தநாளுக்கு பள்ளிகளுக்கு ‘லீவு' இல்லை - ஆதித்யநாத் உத்தரவால் கடுப்பான மாணவர்கள்

சுருக்கம்

no leave for leaders birthday says adityanath

சமூகத்தில் சிறந்த தலைவர்கள், உயர்ந்தவர்களின் பிறந்தநாள், நினைவு தினத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை இனி கிடையாது. விடுமுறை அளித்தால், அவர்களைப் பற்றி மாணவர்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி

டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்த நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. லக்னோவில் நடந்த விழாவில் முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது

சிறந்தது அல்ல

 சுதந்திர போராட்ட தலைவர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த தலைவர்கள், சீர்திருத்த வாதிகள் ஆகியோரின் பிறந்தநாள், நினைவு தினத்தன்று பள்ளிகளுக்கு இப்போது விடுமுறை விடப்படுகிறது. இதுபோன்ற நாட்களில் விடுமுறை அளித்துவிட்டால், மாணவர்கள் அந்த தலைவர்களைப் பற்றி எப்படி தெரிந்து கொள்ள முடியும். விடுமுறை அளிப்பது சிறந்தது இல்லை.

பெரும்பாலான நேரங்களில் பள்ளிகளுக்கு இதுபோன்ற நாட்களில் ஏன் விடுமுறை விடப்படுகிறது என்பது கூட மாணவ, மாணவிகளுக்கு தெரிவதில்லை. இனிமேல், தலைவர்கள் நினைவு, பிறந்தநாளுக்கு இனி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.

சிறப்பு நிகழ்ச்சிகள்

இதுபோன்ற சிறந்த தலைவர்களிடம் இருந்து நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள, சிறப்பு நிகழ்ச்சிகள், திட்டங்களை பள்ளிகள் அறிவித்து செயல்படுத்த வேண்டும். அம்பேத்கரைஎடுத்துக்கொண்டால், அவரின் வாழ்க்கை போராட்டம் நிறைந்த பயணமாகும்.  அந்த கதையைக் கூறி மாணவர்களை உத்வேகம் ஊட்ட வேண்டும்.

220 நாட்கள்

்பல்வேறு நிகழ்வுகள், தலைவர்கள் பிறந்தநாள் உள்ளிட்ட நாட்களில் பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறைவிடுவது, மாணவர்களின் நலனுக்கும், எதிர்காலத்துக்கும் உகந்தது அல்ல. பள்ளிகள் ஆண்டுக்கு 220 நாட்கள் குறைந்த பட்சம் செயல்பட வேண்டும். அதிகமான விடுமுறை நாட்களில் எந்த இலக்கை அடைவதில்லை. பள்ளிக்களுக்கு 130 முதல் 140 நாட்கள் வேலை நாட்கள்  என்பது, மாணவர்கள் கற்றுக்கொள்ள போதுமானதாக இருக்காது.

பாகுபாடு இருக்காது

மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த விதத்திலும் சாதி, மதம் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டாது.  அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வளர்ச்சித்திட்டங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!