
கோரக்ஸ், குரோசின், விக்ஸ் ஆக்சன் 500, டி கோல்டு டோட்டல், அஸ்காரில்-சி உள்ளிட்ட மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் நீக்கியது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கோரக்ஸ், குரோசின், விக்ஸ் ஆக்சன் 500, டி கோல்டு டோட்டல், அஸ்காரில்-சி உள்ளிட்டகோரக்ஸ், குரோசின், விக்ஸ் ஆக்சன் 500, டி கோல்டு டோட்டல், அஸ்காரில்-சி உள்ளிட்ட 344 வகை மருந்துகள் பிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மாத்திரைகள், மருந்துகள் மனிதர்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பவை, மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும் எனக் கருதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்தியஅரசு தடை செய்தது.
இந்நிலையில், மருந்து நிறுவனங்களான பிபைசர், கிளென்மார்க், பிராக்டர் ஆன்ட் காம்பிள், சிப்ல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த தடைக்கு எதிராக 419 மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தன.
எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் திடீரென மத்தியஅரசு தடையை பிறப்பித்து விட்டது என்று மருந்து நிறுவனங்கள் கோரின. அந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் அந்த தடையை நீக்கி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்தது. அதில், மருந்து நிறுவனங்கள், அந்த குறிப்பிட்ட மருந்துகளை தயாரிக்க முறையான விதிகளை பின்பற்றவில்லை, அங்கீகாரம் பெறவில்லை. ஆதலால் தடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.