ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு… யார் ஜெயிப்பார்கள் என முன்கூட்டியே சொல்ல தடை..

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு… யார் ஜெயிப்பார்கள் என முன்கூட்டியே சொல்ல தடை..

சுருக்கம்

ban astrologers

தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியிலோ, பிற ஊடகங்களிலோ முன் கூட்டியே அறிவிக்கக்கூடாது என ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப்  உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில்  அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

ஆனால், முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகளில் முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன. இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள்  அளிக்கப்பட்டன.

இந்த, புகார்களை விசாரித்த தேர்தல் கமிஷன், ஜோதிடர்கள் தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே கணிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ”தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புறம்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் ஜோதிடாகன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!