
காஷ்மீரில் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கும் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், காவல்துறை, ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர் பிடித்து விசாரித்து வந்தனர்..
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல, திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அதாவது, பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு ஊழியர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தவும் தங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து சம்பளம் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்
ஒவ்வோரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் முதல் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் சம்பளத்துடன் ஊதியமும், ஆடைகளும் , காலணிகளும் பாகிய்தானில் இருந்தது வழங்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவ வீரர்கள்,எம்எல்ஏக்கள், அரசு வாகனங்கள் மீது நாங்கள் கல் வீசி தாக்குதல் நடத்துவோம் என்று கூறும் அந்த இளைஞர்கள், நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர எங்களுக்கு பணம் கொடுக்கும் நபர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்.
பெட்ரோல் வெடிகுண்டுகள் தயாரிக்க தனியாக நிதி வழங்கப்படுவதாகவும், ஒரு வெடி குண்டு தயாரிக்க 700 ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும் 50 முதல் 60 வெடிகுண்டுகளைத் தயாரித்து அரசு வாகனங்கள் மீது வீசுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்கு, யார் மீது , எப்போது கல் வீச வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் தகவல் வரும் என்றும் அதிர்ச்சித் தகவலை அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.