மாரியப்பன் , விராத்கோலிக்கு  பத்மஸ்ரீ விருது - பிரணாப் முகர்ஜி வழங்கினார்

 
Published : Mar 30, 2017, 11:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மாரியப்பன் , விராத்கோலிக்கு  பத்மஸ்ரீ விருது -  பிரணாப் முகர்ஜி வழங்கினார்

சுருக்கம்

padmasri awards for virat kohli and mariyappan

இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டன் விராத் கோலி, தமிழகத்தின்தடகளவீரர் மாரியப்பன் தங்கவேலு,ஜிம்னாஸ்டிக்ஸில் ஒலிம்பிக்கில்சிறப்பாக செயல்பட்ட தீபா கர்மாகர்உள்ளிட்ட பலருக்கு குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி  பத்மஸ்ரீவிருதுகளை இன்று வழங்கினார்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகள்பத்மவிருதுகள் ஆகும். கலை,அறிவியல், இலக்கியம், இசை,நாட்டியம், விளையாட்டு, சமூகசேவைஉள்ளிட்டவற்றில் சிறப்பாகசேவையாற்றியவர்களுக்குஆண்டுதோறும் விருதுகள் அளித்துமத்தியஅரசு கவுரவித்து வருகிறது.

அதன்படி 2017ம்ஆண்டுக்கான பத்மவிருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன.அந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி,டெல்லியில் குடியரசு தலைவர்மாளிகையில் இன்று நடந்தது. 

விருதுக்குதேர்வானர்களுக்குகுடியரசுதலைவர் பிராணாப் முகர்ஜிவிருதுகளை வழங்கினார்.

பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதாமூத்த தலைவர் எல்.கே. அத்வானி,மத்தியஅமைச்சர்கள், எம்.பி.கள்,சிறப்பு விருந்தினர்கள் என பலர்கலந்துகொண்டனர்.

இதில் பத்மவிபூஷன் விருது 7பேருக்கும், பத்மபூஷன் விருது 7பேருக்கும், பத்மஸ்ரீ விருது 75பேருக்கும் வழங்கப்பட்டது. இதில் 19பேர் பெண்கள், 5 பேர் வெளிநாடு,வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர்,இறப்புக்குப்பின் 6 பேருக்குவழங்கப்பட்டது.

 

இதில் பத்மவிபூசன் விருதுகள்தேசியவாத காங்கிரஸ் கட்சியின்தலைவர் சரத்பவார், பாரதியஜனதாமூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி, பின்னணி பாடகர் கே.ஜே.ஏசுதாஸ், ஆன்மீக குரு சத்குரு ஜக்கிவாசுதேவ், உடுப்பி ராமசந்திரராவ்,முன்னாள் மக்களவை சபாநாயகர்சங்மா(மறைவு), சுந்தர்லால்பத்வா(மறைவு) ஆகியோருக்குவழங்கப்பட்டது.

பத்மபூஷன் விருது மறைந்தநடிகரும், மூத்தபத்திரிகையாளருமான சோ.ராமசாமிஉள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது கிரிக்கெட் வீரர்விராத் கோலி, தமிழக தடகள வீரர்மாரியப்பன் தங்கவேலு,ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபாகர்மாகர், ஒலிம்பிக்கில் வெண்கலம்வென்ற சாக்்சி மாலிக், வட்டு எறிதல்வீரர் விகாஸ்கவுடா, ஹாக்கி வீரர்பி.ஆர். ஸ்ரீஜேஸ் உள்ளிட்ட 75 பேருக்குவழங்கப்பட்டது. 

 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!