பாபர் மசூதி இடிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

First Published Mar 22, 2017, 4:29 PM IST
Highlights
babri masjid case on supreme court


பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.ஏக். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக கருதப்படும் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை உச்ச நீதின்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 6-ந்தேதிஇடிக்கப்பட்டது. இந்த இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, வி.எச்.பி. தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 19 பேர் மீது கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

விடுதலை

ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ல் உறுதி செய்தது.

நிலுவை

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் பாபர் மசூதி ஹாஜி மகமூப்அகமது(இறந்துவிட்டார்) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.

இரு வழக்குகள்

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டது தொடர்பான வழக்குரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அத்வானி உள்ளிட்ட 13 பேர் விடுக்கப்பட்டனர்.அதேசமயம், கட்டிடத்தை இடித்தது தொடர்பான அடையாளம் தெரியாத கரசேகவர்கள் மீதான வழக்கு லக்னோவில் நடந்தது.

  இந்த இரு விதமான வழக்கில், பல்வேறு நபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வெவ்வேறு இடத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இதை ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் தெரிவித்து  22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதிபதி விடுமுறை

அதன்படி இந்த வழக்கு நேற்று நீதிபதி தீபக் குப்தா மற்றும் நீதிபதி ஆர்.எப். நரிமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நீதிபதி நரிமன் நேற்று விடுமுறையில் சென்று இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஆதலால், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி பி.சி. கோஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

அவகாசம்

இதற்கிடையே ஹாஜி மகபூப் அகமது சார்பில் அவரின் வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் தேவை எனக் கேட்டு ஒருமனுவைத் தாக்கல் செய்தார்.

பாரதியஜனதா கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “ இந்த வழக்கில் சில முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய இருப்பதால், இன்னும் 4 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

 

click me!