இது தான் ராமராஜ்ஜியம்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சத்குரு பாராட்டு..

Published : Jan 18, 2024, 04:33 PM IST
இது தான் ராமராஜ்ஜியம்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சத்குரு பாராட்டு..

சுருக்கம்

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு சத்குரு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் உட்பட கோயில் அறக்கட்டளை, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பாளர் பட்டியலில் 7,000 பேர் உள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைப்பு செய்து வருகிறது. ஜனவரி 22-ம் தேதி பகல் 12.20 மணிக்கு ‘சிலை பிரதிஷ்டை விழாவை வாரணாசியைச் சேர்ந்த லட்சுமி காந்த் தீட்சித் நடத்துகிறார். மதியம் 1 மணிக்குள் விழா நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் திறப்பு விழா: ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை!

மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட உள்ளது.  கும்பாபிஷேகத்தின் ஏழு நாள் சடங்குகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சடங்குகளில் பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 22 நிகழ்ச்சிக்குப் பிறகு, ராமர் கோவில் பக்தர்களுக்கு திறக்கப்படும். இந்தியா முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு சத்குரு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.. தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாரதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான நரேந்திரமோடி, நாகரீகத்தின் நீதி மற்றும் நிலையான தலைவரின் உருவகமாக விளங்கும் ராமருக்கு அனுஷ்டானம் செய்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. (அனுஷ்டானம் என்பது மதச்சடங்குகளை குறிக்கும் வார்த்தை) ஒரு தலைவர் மட்டுமல்ல, பாரதத்தின் அனைத்து தலைவர்களும் குடிமக்களும் நீதியான, நிலையான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்க அனுஷ்டானத்தில் ஈடுபட வேண்டும். இதுதான் ராம ராஜ்யம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!