BJP: Pm Modi:சினிமா பற்றி தேவையில்லாமல் பேசாதிங்கப்பா! பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

By Pothy Raj  |  First Published Jan 18, 2023, 2:39 PM IST

திரைப்படங்கள் பற்றி தேவையற்ற கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.


திரைப்படங்கள் பற்றி தேவையற்ற கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் “ பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சந்திக்க வேண்டும். போராஸ், பாஸ்மண்டாஸ், சீக்கியர்கள் அனைவரையும் சந்தித்து தேர்தல் நிர்பந்தம் ஏதும் இல்லாமல், கோரிக்கை இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

Tap to resize

Latest Videos

வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க முயன்று சிக்கிய பயணி: ஆந்திராவில் ஏறி தெலங்கானாவில் இறங்கினார்

 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் இருக்கிறது, ஆதலால், சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வந்து கொண்டிருக்கிறது, நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். 

காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியின்போது, இரு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது. வரலாறு படைக்க யார் உறுதி எடுத்துள்ளார்களோ அவர்களால்தான் முடியும். பாஜக வரலாறுபடைக்க உறுதி எடுத்துள்ளது, வரலாறு படைக்கும். 

18 முதல் 25வயதுள்ள பிரிவினர் நாட்டின் அரசியல் வரலாறு தெரியவில்லை, கடந்த கால அரசின்ஊழல், தவறுகள் குறித்தும் தெரியவில்லை.அவர்களுக்குத் அதை உணரவைக்க வேண்டும், புரிய வைக்க வேண்டும். பாஜகவின் சிறந்த நிர்வாகம், ஊழல் இல்லாத ஆட்சியை பற்றிக் கூற வேண்டும். பாஜக என்பது அரசியல் இயக்கம் என்பதைவிட, சமூக இயக்கமாக இருக்க வேண்டும்.

திரைப்படங்கள் குறித்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும்”எ னத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இமாச்சலப்பிரதேசம் சென்றது

சமீபத்தில் அமீர்கான் நடித்த பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் அணிந்த ஆடை குறித்து பாஜக தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, ராம் காதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். அதை மறைமுகமாக பிரதமர் மோடி கோடிட்டு காட்டியுள்ளார்.

பிரதமர் மோடி பேசியது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில் “ சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் பாஜக நிர்வாகிகள் சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அரசியல் தலைவர் போன்று பேசாமல், கட்சிக்கு அப்பாற்பட்டு உயர்ந்த மனிதர் போன்று பிரதமர் பேச்சு இருந்தது. பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது. அனைவருக்குமான செயல்திட்டத்தை காண்பித்துள்ளார் மோடி” எனத் தெரிவித்தார்
 

 

click me!