From The India Gate: பாஜகவின் தேர்தல் கணக்கும் திமுகவின் கூட்டணி வேட்டையும்

By Asianet TamilFirst Published Jan 18, 2023, 1:14 PM IST
Highlights

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 8வது எபிசோட்.

கர்நாடகாவின் தேர்தல் கணக்கு

விரைவில் மத்திய அமைச்சரவையும் கர்நாடக அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முயல்வதாகத் தெரியவில்லை. காரணம், ஏற்கெனவே கர்நாடகாவிலிருந்து நான்கு பேர் மத்திய அமைச்சரவையில் உள்ளனர்.

ஆனால், கர்நாடக மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று காத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஷிமோகா எம்.பி. பி. ஒய். ராகவேந்திரா, கல்புர்கி எம்.பி. உமேஷ் ஜாதவ் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மை லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவும் எடியூரப்பாவின் விருப்பமும் இவர்களைத் தேர்வுசெய்ய முக்கியக் காரணமாக இருக்கலாம்.

எடியூரப்பாவிடம் அதிருப்தியை ஏற்படுத்தாத வகையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கூறியிருக்கிறார்.

சனகௌடா பாட்டில் யத்னா, அரவிந்த் பெல்லாட், சி. பி. யோகேஷ்வன் ஆகியோரை அமைச்சரவையில் கொண்டு வர பொம்மை நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்போதைய சூழலில், என்ன நடந்தாலும் எடியூரப்பாவின் மகன் பி. ஒய். ராகவேந்திராவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது நிச்சயம் என்று சொல்லப்படுகிறது.

G20 Summit: ஜி 20 மாநாடு விளம்பர பதாகைகளுடன் புதுவையில் 100 மாட்டு வண்டிகளில் நகர்வலம்

வாரிசு அரசியல்

பெரிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தன் மகன் யதீந்திராவுக்காக ரொம்பவே ரிஸ்க் எடுக்கத் துணிந்துவிட்டார்.

அண்மையில் அவர் பகலாகோட் மாவட்டத்தில் உள்ள பதாமி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். அதுமட்டுமல்ல, கோலார் தொகுதியால் போட்டியிட உள்ளதாவும் தெரிவித்தார்.

வருணா அல்லது பதாமி என இரண்டு தொகுதிகளிலும் சித்தராமையா போட்டியிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று சொல்லலாம். குறிப்பாக பதாமியில் அவரது வெற்றி வாய்ப்பு மிக அதிகம்.

அவர் தேர்ந்தெடுத்துள்ள கோலார் தொகுதி வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது அல்ல என்று காங்கிரஸ் நடத்திய சர்வே கூறுகிறது. சித்தராமையா தனது மகன் யதீந்திராவுக்கு வருணா தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். அதனால்தான் அவர் கோலாரில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். கோலாரின் பொன்னான வாக்குகள் அவருக்குக் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

முதியவரை 500 மீட்டருக்கு பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞர்: பெங்களூரு போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு

வேற்றுமையில் ஒற்றுமை

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

பல கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில், திமுக அந்த விவகாரத்தை அதோடு கைவிட முடிவு செய்துவிட்டது. திமுக மத்திய அரசுடன் உரசலைத் தவிர்க்க நினைக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவில் வலுவான சக்தி நாங்கள்தான் என்பதை பறைசாற்றும் வகையில் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை திமுக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தங்கள் குடையின் கீழ் இழுப்பதற்கும் இந்த விவகாரம் திமுகவுக்கு கைகொடுத்திருக்கிறது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 55 சதவீத இடங்களில் திமுக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில் தொகுதிப் பங்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்று பேசப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள், இப்போது கூட்டணியில் இடம்பெறாத  தேமுதிக, பாமக ஆகியவையும் திமுகவுடன் கூட்டணிக்குள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, காலியாகும் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் பெறுவதற்கு திமுகவை கூட்டணி கட்சிகள் முயற்சிக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது. பார்ப்போம் வெல்லப் போவது யார் என்று.

ஜன.19 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி… முழு பயண விவரம் இதோ!!

தத்தளிக்கப் போவது யார்?

தெலுங்கானா முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 2024ல் ஆந்திராவில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பின் பேரில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை பலவீனப்படுத்தும் திட்டத்துடன்தான் சந்திரசேகர ராவ் ஆந்திராவில் களம் காண உள்ளதாக கட்சி விவகாரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இத்திட்டம் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்த ரவேலா கிஷோர் பாபு, தோட்டா சந்திரசேகர் ஆகியோர் ஜனசேனா கட்சியிலிருந்து தாவியவர்கள்தான். ராஷ்டிர சமிதி களமிறங்குவது பற்றி கேட்டபோது, இதே கருத்தைத்தான் பாஜக முன்னாள் தலைவர் கண்ணா லட்சுமி நாராயணாவும் தெரிவிக்கிறார்.

பவன் கல்யாண் மூலம் ஆந்திராவில் ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் சந்திரசேகர ராவின் எண்ணமும். ஜனசேனா, தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது சந்திரசேகர ராவின் எதிர்பார்ப்பு. இந்தக் கூட்டணி அமைந்தால்தான், ஜெகன் மோகனுக்கு எதிரான பவன் கல்யாண் திரட்டி வைத்திருக்கும் வாக்குகள் சிதறும் என்பது கேசிஆரின் திட்டம்.

எது நடந்தாலும் சந்திரசேகர ராவின் வருகை ஜெகனுக்கு வெற்றி பெற்றுத்தரவே அதிக சாத்தியம் உள்ளது. எதிராளியின் படகைக் கவிழ்கிறார்களா? தாங்களும் சேர்ந்து கவிழ்ந்து தத்தளிக்கப் போகிறார்களா? என்பது போகப்போகத் தெரியும்.

2 மசாலா தோசை மற்றும் 2 காபியின் விலை ரூ.2 தான்… இணையத்தில் வைரலாகும் டெல்லி ஓட்டல் பில்!!

ஏழைக் கட்சியின் பணக்காரத் தொண்டர்கள்

ஒருமுறை மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சியின் வங்கிக் கணக்கில் வெறும் 47 ஆயிரம் ரூபாய்தான் உள்ளது என்று சொன்னார். ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்திருப்பது மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டுகளில் தெரியவந்திருக்கிறது.

அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜாகிர் ஹூசைன் தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் தான் செய்துவரும் தொழில்கள் மூலம் ஈட்டியது என்று அவர் கூறினார். ஆனால், அதற்கான உரிய ஆதாரங்களைக் காட்டவில்லை.

அவர் எடுத்துவிட்ட சாக்குப்போக்குகள் கட்சியும் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தோன்றுகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் இதுபற்றி பேசும்போது, “இந்த ரெய்டுகள் எங்கள் கட்சியின் பேரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி. உசேன் பணத்தை தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவே வைத்திருந்தார்” என்று தெரிவித்தார்.

போன வருடம், அப்போதைய கேபினெட்டில் மம்தாவுக்கு அடுத்தபடியான செல்வாக்கு கொண்டவராக இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி. கல்வித்துறை ஊழல் வழக்கில் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தியபோது ரூ. 50 கோடி சிக்கியது.

இப்படிப்பட்ட பணக்காரர்கள் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஏழைக் கட்சியாக இருப்பது எப்படி என்பதுதான் புரியாத புதிர்.

1000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியவர்!

click me!