Vande Bharat:வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க முயன்று சிக்கிய பயணி: ஆந்திராவில் ஏறி தெலங்கானாவில் இறங்கினார்

By Pothy Raj  |  First Published Jan 18, 2023, 2:00 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் புதிதாகக் தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க முயன்று சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் புதிதாகக் தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க முயன்று சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ராஜமுந்திரி நகரில் இறங்க வேண்டிய பயணி செல்பி எடுக்க முயன்றபோது ரயிலின் தானியங்கி கதவு மூடிக்கொண்டு ரயில் புறப்படத் தொடங்கியது, இதனால், ராஜமுந்திரியில் இறங்க வேண்டிய பயணி செகந்திராபாத்தில் இறங்கினார்.

Tap to resize

Latest Videos

முதியவரை 500 மீட்டருக்கு பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞர்: பெங்களூரு போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு

தென் மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில் “ கடந்த 16ம் தேதி வந்தே பாரத்  எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத்துக்கு இயக்கப்பட்டது. இதில் பயணித்த பயணி ஒருவர் ராஜமுந்திரி நகரில் இறங்க வேண்டும். ஆனால், அந்த பயணி ரயிலை விட்டு இறங்கும் முன் செல்பி எடுக்க முயன்றார்.

 

Boarded for selfie Door closed automatically, Craze for vande bharat😹 pic.twitter.com/f4bWUrDnkc

— Lala (@FabulasGuy)

ஆனால், ரயில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்றநிலையில் செல்பி எடுத்து முடிப்பதற்கும் தானியங்கி கதவு மூடிக்கொண்டு, ரயில் செகந்திராபாத் நகரம் நோக்கி புறப்படத் தொடங்கியது. இதனால், ராஜமுந்திரியில் இறங்க வேண்டிய பயணி, செகிந்திராபாத் வரை பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ரயில் இடையே எங்கும் நிற்காது என்பதால் செகிந்திராபாத்தில் அந்தப்பயணி இறங்கினார்.

அந்தப்பயணிக்கு அபராதமோ தண்டனையோ ஏதும் விதிக்கவில்லை. ராஜமுந்திரியில் இருந்து செகிந்திராபாத் வரையிலான கட்டணம் என்னவோ அதை மட்டும் செலுத்தக் கோரினோம். அவரும் செலுத்திவிட்டு சென்றார். ஆனால், எப்படி ராஜமுந்திரி சென்றார் என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இமாச்சலப்பிரதேசம் சென்றது

பிரதமர் மோடி, கடந்த 15ம் தேதி, செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஆனால், வர்த்தகரீதியான சேவை 16ம் தேதிதான் தொடங்கியது, முதல்நாளே ஒரு பயணிசிக்கிக்கொண்டு அபராதம் செலுத்தியுள்ளார். 

click me!