அவனி சதுர்வேதி: வெளிநாட்டு விமானப்படை போர்ப் பயிற்சியில் முதல் இந்திய வீராங்கனை

By SG BalanFirst Published Jan 8, 2023, 9:18 AM IST
Highlights

இந்திய விமானப்படையும் ஜப்பானில் மேற்கொள்ள இருக்கும் விமானப்படை போர் பயற்சியில் இந்திய விமாப்படை பைலட் அவனி சதுர்வேதி பங்கேற்கிறார்.

ஜப்பானில் அந்நாட்டு விமானப் படையுடன் இந்தியா விமானப் படையும் இணைந்து போர் பயிற்சி நடத்தவுள்ளது. இந்தப் போர் பயிற்சிக்கு ‘வீர் கார்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் போர்ப் பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளத்தில் ஜனவரி 16 முதல் 26 வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய விமானப்படை வீராங்கனை அவனி சதுர்வேதி பங்கேற்க உள்ளார் என்று இந்திய விமானப்படை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிற நாட்டுப் படைகளுடன் இணைந்து நடத்திய விமானப்படைப் பயிற்சிகளில் இந்திய விமானப்படை வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் நடைபெறும் விமானப்படை போர்ப் பயிற்சியில் இந்திய வீராங்கனை ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.

ஐ.நா.வின் அமைதிப் படையில் 25 இந்திய வீராங்கனைகள்!

இதில் கலந்துகொள்ளும் அவனி சதுர்வேதி அதிநவீனமான Sukhoi-30MKI என்ற சுகோய் ரக ஜெட் விமானத்தில் அவர் பறந்தபடி போர்ப்பயிற்சியில் பங்கேற்க இருக்கிறார். ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் மிக் 21 பிசான் (MiG-21 `Bison’) என்ற அதிநவீன விமானத்தை முதல் முதலில் தனியாக இயக்கிய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றவர் அவனி.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரேவா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி, ஜெயப்பூரில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்திருக்கிறார். இவர் 2016ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்ட முதல் மூன்று பெண்களில் ஒருவர். இப்போது இந்திய விமானப்படையில் 17 போர் விமான பைலட்கள் உள்ளனர்.

உலகின் மிக உயரமான போர்முனையில் முதல் பெண் ராணுவ அதிகாரி!

இந்தப் போர்ப் பயிற்சி இந்தியா – ஜப்பான் இடையேயான ராணுவக் கூட்டுறவின் ஒருபகுதியாகும். இருநாடுகளிலும் சீனா அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடும் நிலையில் இந்தக் கூட்டு விமானப்படை போர்ப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 150 பேர் இப்பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த போர் விமானங்கள் இப்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும்.

click me!