இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுதா மூர்த்தி மைசூர் அரச குடும்பத்தினரின் காலில் விழுந்து வணங்கி இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மரியாதை நிமிர்த்தமாக அவ்வாறு வணங்குகிறார் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.
மைசூர் அரச குடும்பத்து பெண்ணின் காலில் விழுந்த மாதிரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''இவ்வாறு மரியாதை செலுத்தும் சுதா மூர்த்தி ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். இன்னும் அரச குடும்பத்தினரைப் பார்த்தால் காலில் விழுந்து வணங்கும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறதா? அல்லது அவர் மரியாதை நிமிர்த்தமாக இதை செய்கிறாரா?'' என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?
இருந்தாலும், சுதா மூர்த்தி அவ்வாறு வணங்கியதை பலரும் வரவேற்கவில்லை. ''சுதா மூர்த்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது புத்தகங்கள் பல பெண்களை உயர்த்தவும், முன்னேற்றவும் தூண்டியது. அரச குடும்பத்தினர் முன்பு அவர் சாஷ்டாங்கமாக வணங்குவது உணர்வுபூர்வமான வெளிப்பாடாகும்'' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஒரு பதிவில், ''அவராக விருப்பப்பட்டு விழுந்து வணங்குவதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அரச குடும்பத்தினரிடம் சலுகைகளைப் பெறுபவர்கள் இதுபோன்று நடந்து கொள்ளும்போது அதில் ஒரு உள் அர்த்தம், உள் நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுதா மூர்த்தி இதுபோன்று நடந்து கொள்வதில் எந்தவித உள் அர்த்தமும் இருக்க முடியாது.
இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
bowing before Member of the Royal Family. She is supposed to be a Role Model. This still a Tradition of Greeting the Members of in Or was it more like an out of Reverence pic.twitter.com/Z6kxZYXvoH
— Manju India 🇮🇳🏏🏀💖 (@VManjunathIndi1)இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுதா மூர்த்தி எழுத்தாளராக, கல்வியாளராக, நன்கொடையாளராக இருந்து வருகிறார். 1996ஆம் ஆண்டில் தனது கணவருடன் இணைந்து இன்போசிஸ் பவுண்டேஷன் துவக்கினார். இந்த பவுண்டேஷன் சுகாதாரம், கிராம வளர்ச்சி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இலவச சேவைகளை செய்து வருகிறது.
இதையும் படிங்க..டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பிடி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !