ஏ.டி.எம். சேவையை மேம்படுத்த புதிய குழு - மத்திய அரசு சுறுசுறுப்பு

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 12:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
ஏ.டி.எம். சேவையை மேம்படுத்த புதிய குழு - மத்திய அரசு சுறுசுறுப்பு

சுருக்கம்

ஏ.டி.எம். களில், 2000 ரூபாய் நோட்டுகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் சேவையை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் புதிய குழுவை மத்திய அரசு அமைக்கிறது. 

இந்த குழு நாடுமுழுவதும் உள்ள ஏ.டி.எம். களின் சேவையை மேம்படுத்தி, குறுகிய காலத்தில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.2000  நோட்டு கிடைக்கும் வகையில் செயல்பட உள்ளது.

இது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி கந்த தாஸ் புதுடெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் இருக்கும் ஏ.டி.எம். மையங்களை மறுஅளவீடு, சீரமைப்பு செய்து, மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டு கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் துரிதமாக, திட்டமிட்ட படி செயல்பட, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு வங்கிகளுடனும், ஏ.டி.எம். களில் பணம் நிரப்பும் பணியைச் செய்துவரும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, விரைவாக அனைத்து சீரமைப்பு பணிகளையும் முடிக்க துணை புரியும். 

மிகக் குறுகிய காலத்தில் ஏ.டி.எம். மையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைப்பதை இந்த குழு உறுதி  செய்யும் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Sleep Internship: 60 நாள் தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற இளம்பெண்! யார் அந்த இந்தியன் ஸ்லீப் லேடி?
Free Prasadam: நவம்பர் 7 முதல் இலவச திருப்பதி லட்டு, வடை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?