கொள்ளையர் கூட்டத்தில் ஃபிகர்கள்: பொண்ணுங்க சொன்னதும் ஏ.டி.எம்.மெஷினை பொளக்கும் கூட்டம்.

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
கொள்ளையர் கூட்டத்தில் ஃபிகர்கள்: பொண்ணுங்க சொன்னதும் ஏ.டி.எம்.மெஷினை பொளக்கும் கூட்டம்.

சுருக்கம்

atm machines robbery behind for Figures

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கப்போன இடத்தில் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான போலீஸின் பார்வை அழுத்தமாக பதிந்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று கோயமுத்தூரில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் உள்ளிட்ட சில வட இந்திய மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களை நாமக்கல் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

இரண்டு கார்களில் பயணித்த அவர்களை மடக்கி சோதனை செய்தபோது ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிக்கும் டீம் அது என்பது தெரிந்திருக்கிறது. 

இந்த கும்பல் இந்தியாவில் ஏழு மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களை கொள்ளையடித்திருப்பது தெரிந்திருக்கிறது. மொத்தம் 40 பேர் இந்த கும்பலில் இருந்திருக்கின்றனர். 3 குழுக்களாய் பிரிந்து தென்னிந்திய மாநிலங்களில் ஏ.டி.எம்.களை குறி வைத்து  பணத்தை அடித்திருக்கின்றனர். 

ஏ.டி.எம். மெஷினை உடைத்து திறப்பதற்காக காஸ் சிலிண்டர்களின் உதவியோடு வெல்டிங் மெஷின்களை பயன்படுத்தி உடைத்து பின் பெரிய சைஸ் கடப்பாறை ஆகியவற்றைக் கொண்டு பணமிருக்கும் மெஷினின் பாகத்தை பிளந்து பணத்தைக் கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 

இதில் மூன்று குழுக்களில் ஒரு குழுவை தலைமை தாங்கியவன் டில்லியை சேர்ந்த அஸ்லாம். இவன் தனது மனைவி கிரணுடன் இணைந்து கொள்ளையடித்திருக்கிறான் தொடர்ந்து. 

இந்தப் பெண் போக, இந்த டீம்களில் மேலும் சில இளம்பெண்களும் இருக்கிறார்களாம். இந்த இளம் பெண்கள்தான் எந்தெந்த ஏ.டி.எம்.மில் காவலாளி இல்லை, இருந்தாலும் ஜொள்ளு பார்ட்டியாக இருக்கிறார், எந்த ஏ.டி.எம்.மில் ஈஸியாக கொள்ளையை நடத்தலாம் என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை திரட்டி கொடுப்பார்களாம்.

இந்த ஃபிகர்கள் போட்டுத் தரும் ஸ்கெட்சின் அடிப்படையில்தான் கொள்ளை வாகனம் போய் நிற்குமாம் மெஷினை பிளக்க!
என்னா வில்லத்தனம்!...
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!