இன்று முதல் ஏ.டி.எம்களில் ரூ 4,500….பணத் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்களுக்கு ஆறுதல்

Asianet News Tamil  
Published : Jan 01, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
இன்று முதல் ஏ.டி.எம்களில் ரூ 4,500….பணத் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்களுக்கு ஆறுதல்

சுருக்கம்

இன்று முதல் ஏ.டி.எம்களில் ரூ 4,500….பணத் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்களுக்கு ஆறுதல்

நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, புத்தாண்டு தினமான இன்று முதல் ஏ.டி.எம்களில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதிய அளவு பணம் கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த பொதுமக்களுக்கு இது சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. 

கள்ள நோட்டுகள், கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன. அத்துடன் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், பணம் பெறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பு வெளியாகி 50 நாட்கள் கடந்த பிறகும், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணமின்றி, தங்கள் சொந்த பணத்தைக்கூட எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஏ.டி.எம்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே எடுக்கலாம் என்ற வரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது.

ஏ.டி.எம். மையங்களில் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கலாம் என தெரிவித்திருந்தது. அதன்படி, புத்தாண்டு தினமான இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

பணபரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த பொதுமக்களுக்கு இது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

எனினும், தங்களின் தேவைக்கான பணத்தை எவ்வித கட்டுப்பாடுமின்றி எளிதாக பெற்றுக்கொள்ளும் சூழல் எப்பொழுது உருவாகிறதோ அன்றுதான் தங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்தா நாளாக இருக்கும் என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Goa Shopping: கோவா போறீங்களா? சீப்பா ஷாப்பிங் செய்ய சூப்பர் இடங்கள் இதோ..!
Goa Adventure: பீச், பார்ட்டி மட்டும் இல்ல... த்ரில் அனுபவங்களுக்கு கோவா வாங்க!