காங். தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை... ஆதரவாளர்களின் எதிர்ப்பால் கெலாட் அதிரடி முடிவு!!

By Narendran SFirst Published Sep 29, 2022, 6:47 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ராஜஸ்தான் முதலமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ராஜஸ்தான் முதலமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி 2 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலிலும் தொல்வியை சந்தித்ததை அடுத்து கட்சியை சீரமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆவது வெற்றிபெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதனிடையே கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.

இதையும் படிங்க: கர்பா நடனம் வேடிக்கை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!!

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற கேட்டுக்கொண்ட போது அதனை அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்கிற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து கட்சியின் மூத்த தலைவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு கட்சியின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி என்பது தடையாக அமைந்தது.

இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை... பிரதமர் மோடி பெருமிதம்!!

காங்கிரஸ் தலைவராகிவிட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும், ஆனால் முதல்வராக இருந்துகொண்டே, கட்சித் தலைவர் பதவியையும் வகிக்க வேண்டும் என்பது கெலாட்டின் விருப்பம். எனவே ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அசோக் கெலாட் மறுத்துவிட்டார். மேலும் அவரது 90 ஆதரவு எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய போவதாக மிரட்டி உள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கெலாட்டுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள், ராஜஸ்தானில் தலைமைக்கு எதிரான நிலைபாட்டை எடுத்த நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்காக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

click me!