கர்பா நடனம் வேடிக்கை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!!

Published : Sep 29, 2022, 04:49 PM ISTUpdated : Sep 29, 2022, 04:51 PM IST
கர்பா நடனம் வேடிக்கை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!!

சுருக்கம்

அகமதாத்தில் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

அகமதாத்தில் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்கு முஸ்லிம் வாலிபர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க:கார்களில் ஆறு சீட் பெல்ட் கட்டாயம்; எப்போது அமலுக்கு வருகிறது நிதின் கட்கரி அறிவிப்பு!!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அகமதாபாத்தில் இருக்கும் சிந்து பவன் பகுதியில் நடந்துள்ளது. இந்த கர்பா நடனத்தில் மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாகவும், செவ்வாய் அன்று இரவு கண்காணிப்பு பணியில் இருவர் ஈடுபட்டு இருந்ததாகவும் விஹெச்பி செய்தி தொடர்பாளர் ஹிதேந்திரசிங் ராஜ்புட் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இந்த எச்சரிக்கையையும் மீறி சிந்து பவன் பகுதியில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் நின்று வேடிக்கை பார்த்ததாகவும், லவ் ஜிகாத்தை தடுப்பதற்காகவும் அந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை... பிரதமர் மோடி பெருமிதம்!!

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!