மதுபான ஊழல் வழக்கு... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்..

By Ramya s  |  First Published Mar 16, 2024, 11:43 AM IST

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சம்மனைத் தவிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  அமலாக்கத்துறை அவருக்கு இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அனைத்து சம்மன்களையும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துடன், அமலாக்கதுறையில் ஆஜராவதையும் தவிர்த்து வந்தார்..

இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்த. டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பியது. 

Tap to resize

Latest Videos

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!

இந்த நிலையில் அமலாக்க இயக்குனரக சம்மன் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய தலைநகர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜரானார். அப்போது அமலாக்க இயக்குனரகத்தின் இரண்டு புகார்களிலும் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. டெல்லி முதல்வருக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) திவ்யா மல்ஹோத்ரா ஜாமீன் வழங்கினார். ரூ.15,000 ஜாமீன் மற்றும் ரூ. 1 லட்சம் ஜாமீனில் ஜாமீன் வழங்கப்பட்டது. 

பலமுறை சம்மன்களைத் தவறவிட்டதாக அமலாக்க துறை அளித்த புகார்களின் அடிப்படையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.15,000 மதிப்பிலான ஜாமீன் மற்றும் ரூ.1 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தில் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.

மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

முன்னதாக மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மியின் உயர்மட்ட தலைவர்களான முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பலமுறை அடிபட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலால் கொள்கை வரைவு செய்யப்படும் போது முதலமைச்சருடன் தொடர்பில் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எனினும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க நரேந்திர மோடி அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அரவிந்த்  கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!