அருணாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்… 33 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் அதிரடி திருப்பம்….

Asianet News Tamil  
Published : Jan 01, 2017, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
அருணாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்… 33 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் அதிரடி திருப்பம்….

சுருக்கம்

அருணாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்… 33 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் அதிரடி திருப்பம்….

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பேமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து. பேமா காண்டு தலைமையில் 33 எம்.எல்.ஏ. க்கள் அக்கட்சியிலிருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தனர். 

60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் 43 எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. இந்நிலையில், பேமா காண்டு தலைமையிலான அரசு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாகவும் பா.ஜ.க.வில் பேமா காண்டு தனது கட்சியை இணைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் அவரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. 
 

இந்நிலையில்  பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற பேமா காண்டுவோ, கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளதார்.

43 எம்.எல்.ஏ.க்களில் பேமா காண்டு உள்ளிட்ட 33 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் ஆட்சியமைக்கும் தகுதியை இழந்துள்ளது. 

இதனிடையே புதிதாக இணைந்த 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. புதிய ஆட்சிமைக்க உரிமை கோரியுள்ளது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பேமா காண்டு சபாநாயகர் முன்பு நிறுத்தினார். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். 

60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல் பிரதேச சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 47 ஆக உயர்ந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

"கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி தள்ளுபடி! ₹300 குறைப்பு - உடனே முந்துங்கள்!"
இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்… உலகமே இந்தியாவை திரும்ப பார்க்குது.!!