புத்தாண்டு பரிசா? அல்லது புதிய அதிர்ச்சியா?...இரவு 7.30 மணிக்கு மோடி பேசுகிறார்- தயாராக இருங்கள்

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 07:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
புத்தாண்டு பரிசா? அல்லது புதிய அதிர்ச்சியா?...இரவு 7.30 மணிக்கு மோடி பேசுகிறார்- தயாராக இருங்கள்

சுருக்கம்

புத்தாண்டு பரிசா? அல்லது புதிய அதிர்ச்சியா?...இரவு 7.30 மணிக்கு மோடி பேசுகிறார்- தயாராக இருங்கள்

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த நிலையில், இன்று இரவு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேரடியாக பிரதமர் மோடி உரையாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்களை 50 நாட்களுக்கு பொறுத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறிய காலக்கெடு வெள்ளிக்கிழமையோடு முடிந்தது.

இந்நிலையில், மோடி 2017-ம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக நாட்டு மக்களிடம் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், இதை மத்தியஅமைச்சர் கிரண்ரிஜிஜூ உறுதி செய்துள்ளார்.

எதைப்பற்றிப் பேசுகிறார்?

மோடி தன்னுடைய உரையில், ரூபாய் நோட்டு தடை   குறித்தும், எளிதான பணப்புழக்கத்தை ஏற்படுத்த அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள், திடீர் சலுகைகள், புதிய திட்டங்கள், கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்க இருக்கும் அடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது.

மத்தியஅமைச்சர் கிரிண் ரிஜ்ஜூ டுவிட்டரில் கூறுகையிர், “ பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் உரையில் நிச்சயம் கருப்பு பணப்பதுக்கல்காரர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை பிரதமர் மோடி கொடுக்கலாம். எதுவேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் '' எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்
Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?