பொதுமக்கள் போனில் தற்போது அவசர எச்சரிக்கை போன்ற குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் உடனடி அவசர எச்சரிக்கை போன்ற நோட்டிபிகேஷன்களை பெற்று வருகின்றனர். இதனால் பலரும் பல்வேறு விதமான பயத்தில் இருக்கிறார்கள். இந்த திடீர் அலெர்ட் மெசேஜ் ஏன் வருகிறது என்பதை பார்க்கலாம். பல பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் அவசர எச்சரிக்கை செய்தியைப் பெற்றனர்.
அந்தச் செய்தியில், 'இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி இது. உங்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். இந்த செய்தி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் TEST Pan-India அவசர எச்சரிக்கை அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிப்பதும் இதன் நோக்கமாகும்.'வெள்ளிக்கிழமை மதியம் 12.19 மணிக்கு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்த செய்தி சென்றடைந்தது.
மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகள் மூலம் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பின் திறன் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற சோதனைகள் வெவ்வேறு இடங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம், சுனாமி மற்றும் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு சிறப்பாக தயார்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!